" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
மதுரை அருகே கொரோனா விற்கு என்று அமைக்கப்பட்ட. தனி சிகிச்சை பிரிவு
திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி நுரையீரல் சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கான தற்காலிக தனி சிறப்பு மையம் படுக்கையுடன் தயார் நிலையில் உள்ளது. ஆஸ்டின்பட்டி அரசு நுரையீரல் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 90 படுக்கையறை கொண்ட கொரோனா தடுப்பு தற்காலிக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதை தனிமைப்படுத்தும் பிரிவு என்று தனித்தனியாக ஐந்து படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தீவிர சிகிச்சைப் பிரிவு என்று 85 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு படுக்கைக்கும் தலா ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தற்காலிக மையம் அமைக்கப்பட்டுள்ளதால் நுரையீரல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் தேவையான மாத்திரை மருந்துகளை கொடுத்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை உள்ளவர்களுக்கு மட்டும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில கொரோனா தொற்றுக்கான தனி சிகிச்சை பிரிவுக்கு மாற்றாக மற்றொரு மையங்களாக ஆஸ்டின்பட்டியில் தனி சிறப்பு மையமும் தற்காலிக வார்டு செயல்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன